Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை வளாகத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பர் 17, 18ஆம் திகதிகளில்

புரட்டாதி 18, 2026
Uncategorized
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை: இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வு மாநாடான TRInCo 2026, செப்டம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

“Innovate, Integrate, and Evolve Blue and Green: Towards an Inclusive Sustainable Development” என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாடு, ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் தொழிற்துறை வல்லுநர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது.

மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு செப்டம்பர் 17ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீடத்தில் நடைபெறவுள்ளதுடன், தொழில்நுட்ப அமர்வுகள் செப்டம்பர் 18ஆம் திகதி பிரயோக விஞ்ஞான பீடக் கட்டடத்தில் இடம்பெறவுள்ளன.

அங்குரார்ப்பண நிகழ்வுக்கு திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் K. T. சுந்தரேசன் தலைமை தாங்கவுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் பிரதம அதிதியாகவும், அவுஸ்திரேலியாவின் Queensland University of Technology-யின் School of Accountancy, Faculty of Business and Law-ஐச் சேர்ந்த இணைப் பேராசிரியர் Annette Quayle கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டின் பிரதான உரையை Ocean University of Sri Lanka-வின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் Nalin Rathnayake நிகழ்த்தவுள்ளார். இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள National Institute of Siddha நிறுவனத்தின் Department of Gunapadam-ஐச் சேர்ந்த பேராசிரியர் S. Sivakumar மற்றும் Sustainable Tourism Initiatives நிறுவனத்தின் தலைவர், Global Sustainable Tourism Council-இன் பிரதான பயிற்றுவிப்பாளர் மற்றும் Green Destinations நாட்டிற்கான ஒருங்கிணைப்பாளர் கலாநிதி Chinthana Duminduhewa ஆகியோர் சிறப்புப் பேருரைகளை வழங்கவுள்ளனர்.

இதனுடன் கலாசார நிகழ்வுகள் மற்றும் விஞ்ஞான கலந்துரையாடல் அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப அமர்வுகளில் கடல் மற்றும் கரையோர விஞ்ஞானங்கள், மருத்துவம் மற்றும் சுகாதார விஞ்ஞானங்கள், வணிகம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள், கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள், கொள்கை மற்றும் ஆளுகை, அகிம்சை மற்றும் சமாதானக் கற்கைகள், விவசாயம் மற்றும் உணவு விஞ்ஞானங்கள், கலை மற்றும் கலாசாரம் உள்ளிட்ட ஒன்பது ஆய்வுத் துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்படவுள்ளன.

நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை நோக்கிய புதிய ஆய்வுகள், புத்தாக்கங்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான முக்கிய தளமாக TRInCo 2026 அமையவுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

Uncategorized

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம் – பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அறிக்கை

ஆடி 31, 2025
Uncategorized

இலங்கை வங்கி BOC தலைமையகத்தில் தீ விபத்து

ஆவணி 12, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?