Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

SLCBC Premier Regional Excellence Awards 2026 விழாவில் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்திற்கு கௌரவம்

ஆனி 24, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2026 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் J Hotel இல் நடைபெற்ற Sri Lanka–Canada Business Council (SLCBC) Premier Regional Excellence Awards 2026 விருது வழங்கும் விழாவில், திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் (TDBC) சிறந்த பங்காளி அமைப்பாக கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு. ஆர். ராஜாராம்மோகன் அவர்கள், வணிகத் துறையில் ஆற்றிய சிறப்பான தலைமைத்துவம் மற்றும் வணிக சமூகத்தின் முன்னேற்றத்திற்காக வழங்கிய அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பை பாராட்டி, “Most Respected Business Leader Award” எனும் உயரிய விருதினைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், மகாலக்ஷ்மி ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. எஸ். சிவகுமார் அவர்கள், தனது சிறந்த தொழில்முனைவுத் திறன், வணிக சாதனைகள் மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் “Outstanding Enterprise Award” விருதினால் கௌரவிக்கப்பட்டார்.

இந்தப் பெருமைமிகு விருதுகள், திருகோணமலை வணிக சமூகத்தின் அர்ப்பணிப்பு, சாதனைகள் மற்றும் வளர்ச்சியை பிரதிபலிப்பதோடு, நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும் வணிக மேன்மையையும் ஊக்குவிப்பதில் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் மற்றும் அதன் உறுப்பினர்கள் வகிக்கும் முக்கிய பங்கினையும் வெளிப்படுத்துகின்றன.

இவ்விருதுகளைப் பெற்ற திரு. ஆர். ராஜாராம்மோகன் மற்றும் திரு. எஸ். சிவகுமார் ஆகியோருக்கு திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் எதிர்கால முயற்சிகளிலும் தொடர்ந்தும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற “பெண்மையைப் போற்றுவோம் 2025”

ஆடி 28, 2025
இலங்கைதிருக்கோணமலை

கிண்ணியாவில் பேருந்து – எரிபொருள் பவுசர் நேருக்கு நேர் மோதி விபத்து

புரட்டாதி 7, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலையில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாநாடு

ஆவணி 4, 2025
இலங்கைதிருக்கோணமலை

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து சுவிச்சர்லாந்து இராஜதந்திரிகளுடன் AHRC கலந்துரையாடல்

ஆனி 12, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?