உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியான ‘கொம்மன்பேங்க் சாக்கரூஸ்’ (CommBank Socceroos) அணியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இளம் வீரர் நிஷான் வேலுப்பிள்ளை (Nishan Velupillai) சேர்க்கப்பட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் அவர் அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் மைதானங்களில் தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கி, இன்று சர்வதேச அரங்கில் தடம் பதித்துள்ள நிஷானின் இந்த அசுர வளர்ச்சி, புலம்பெயர்ந்து வாழும் இளைய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு மாபெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. கடின உழைப்பும், தளராத விடாமுயற்சியும் இருந்தால் உலக விளையாட்டின் மிக உயரிய மேடைகளை எட்ட முடியும் என்பதற்கு நிஷானின் இந்தத் தேர்வு ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.
‘Trinco Mirror’ மற்றும் திருகோணமலை மக்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஆஸ்திரேலிய அணியில் தடம் பதித்து, உலகக் கோப்பையை நோக்கித் கால்பதிக்கும் தம்பி நிஷான் வேலுப்பிள்ளைக்கு, இலங்கையின் கிழக்கு முனையிலிருந்து எமது ‘Trinco Mirror’ ஊடகக் குழுமமும், திருகோணமலை (Trinco) மக்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தாயக மண்ணிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ள நிஷான், சர்வதேசக் களத்தில் பல சாதனைகளைப் படைக்க திருகோணமலை மண்ணிலிருந்து எமது வாழ்த்துப் பாக்களை அர்ப்பணிக்கின்றோம்.

