Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு யாழில்

சித்திரை 8, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் ஒரு நினைவு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

இன்று புதன்கிழமை(08) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்தது. ஐம்பது ஆண்டுகள் கடந்தபின்னரும், அதன் அடிப்படை கோரிக்கைகளும் கொள்கைகளுமே தமிழின விடுதலை பாதையின் அடிநாதமாகவும், அடித்தளமாகவும் உள்ளது.

இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம், தீர்மானத்தின் அரசியல், சட்ட மற்றும் தமிழ் இனத்தின் இறைமையின் பரிமாணங்களும் ஆராயப்படும்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழ்மக்களின் அபிலாசையை வெளிப்படுத்த பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடக பிரதிநிதிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரை ஏற்பாட்டாளர்கள் அன்புரிமையுடன் அழைக்கின்றனர்.

குறித்த ஊடக சந்திப்பில் ஊடக சந்திப்பில் தவத்திரு வேலன் சுவாமிகள்,அருட்தந்தை அகஸ்ரின் அடிகளார்,அருட்பணி ஜெகதாஸ் அடிகளார் மற்றும் க.இதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இருநூறு ரூபாய் இலஞ்சம் பெற்றவர் கைது

ஆவணி 13, 2025
இலங்கைதிருக்கோணமலை

செம்மணிக்கு நீதி கோரி நாளை திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

ஆடி 25, 2025
இலங்கைதிருக்கோணமலை

ஊடகவியலாளர் ஹயக்கிரிவன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு CTIDயால் அழைப்பாணை

கார்த்திகை 28, 2025
இலங்கைதிருக்கோணமலை

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதியைக் கோரி கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

ஆவணி 31, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?