நாடு தழுவிய பாடசாலைகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டி 2025ன் பழுதூக்குதல் (வெயிட் லிஃட்டிங்) போட்டிகளில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தி ஐந்து தேசியப் பதக்கங்களை வென்று மாவட்டத்தின் பெயரை ஒளிர வைத்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு திருகோணமலை லிஃட்டர்ஸ் கிளப் (TRINCO LIFTERS CLUB) அடித்தளமாக அமைந்தது. கிளப்பின் தலைமைப் பயிற்சியாளர் உமாசுதன், இணைப் பயிற்சியாளர் கிரிஜா மற்றும் பயிற்சி ஆசிரியை மோகனகுமாரி ஆகியோரின் அர்ப்பணிப்புமிகு பயிற்சியும் வழிகாட்டலுமே இந்த அருமையான வெளிப்பாட்டுக்கு அடிகோலியுள்ளது.
பங்கேற்ற ஐந்து வீராங்கனைகளும் பதக்கங்களைக் குவித்து, தங்கள் திறமையைத் தேசிய மட்டத்தில் நிரூபித்துள்ளனர்.
பதக்க வெற்றியாளர்கள்:
தங்கப் பதக்கங்கள்:
ஹரினி (17 வயதிற்குட்பட்ட பிரிவு, 81 கிலோ) – தி. சண்முகா இந்து மகளிர் கல்லூரி
கிஷோதிகா (20 வயதிற்குட்பட்ட பிரிவு, 59 கிலோ) – தி. சண்முகா இந்து மகளிர் கல்லூரி
வெள்ளிப் பதக்கம்:
கோபிகா (17 வயதிற்குட்பட்ட பிரிவு, 71 கிலோ) – தி. விவேகானந்தா கல்லூரி
வெண்கலப் பதக்கங்கள்:
சுகல்யா (17 வயதிற்குட்பட்ட பிரிவு, 49 கிலோ) – தி. விவேகானந்தா கல்லூரி
யோமிஷா (20 வயதிற்குட்பட்ட பிரிவு, 64 கிலோ) – மல்லிகைத்தீவு மகாவித்தியாலயம்

