விண்வெளி மற்றும் வானியல் பற்றிய அறிவைப் பரப்பும் வகையில், திருகோணமலை மான் பூங்காவிற்கு முன்னால் அமைந்துள்ள மைதானத்தில் ‘நடமாடும் கோளரங்கம்’ (Mobile Planetarium) ஒன்று அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தல் நடைபெற உள்ளது.
இதுவரை இத்தகைய அனுபவத்தைப் பெற கொழும்பு போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டியதிருந்தது. இப்போது திருகோணமலை மக்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கும், இந்த அரிய வாய்ப்பு அவர்களின் கிராமத்திற்கே வந்துள்ளது.
குறித்த காட்சிப்படுத்தல் நேற்று (30.08.2025) ஆரம்பிக்கப்ட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிய வருகின்றது.

தமிழ் மொழி மூல காட்சிப்படுத்தல் புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஆகிய தினங்களிலும்
சிங்கள மொழி மூல காட்சிப்படுத்தல் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களிலும் இடம்பெறவுள்ளது.
பாடசாலை நேரத்தில் சீருடையுடன் செல்கின்ற மாணவர்களுக்கு 250 ரூபாவும்
ஏனையோருக்கு 300 ரூபாவும் அறவிடப்படுகின்றது.
- காலம் :- 30.08.2025 – 06.10.2025
- நேரம் :- காட்சி 1 – மாலை 05.00 – 7.00
- காட்சி 2 – இரவு 07.00 – 9.00
தமிழ் மொழி :- புதன், வியாழன், வெள்ளி, சனி
சிங்கள மொழி :- ஞாயிறு, திங்கள், செவ்வாய்