அஞ்சல் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பால் இன்றைய தினம் இரண்டாவது நாளாக திருக்கோணமலை பிரதான தபால் நிலையம் முற்றாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
தபால் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தபால் நிலையத்துக்கு வருகை தந்து திரும்பிச் செல்லும் காட்சிகளை அவதானிக்க முடிந்தது.
உப அஞ்சல் அலுவலகம், தபால் அறை போன்ற சகல விடயங்களின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.