நேற்று முன்தினம் (2025.08.17) வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி திருகோணமலை மாவட்டத்திலிருந்து மூன்று மாணவர்களும் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அவர்கள் பெற்றுக் கொண்ட பதக்கங்களும் வெற்றிகளும் வருமாறு.
1.S.Prajith (Bronze Medal in Maths Olympiad Individual & Cultural Program 3rd place) – தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
2. S.Divasshine (Cultural Program 3rd place) – தி/ஸ்ரீ சண்முக இந்துமகளிர் கல்லூரி
3.R.Nivesh (Cultural Program 3rd place) – தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
போட்டிக்காக சிரமம் பாராது அயராது உழைத்த மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் பாடசாலை சமூகம், பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிப்பதோடு இம் மாணவர்கள் மேலும் பல வெற்றிகளை பெற்று சர்வதேச ரீதியில் பல சாதனைகளைப் படைக்க சார்பாக வாழ்த்துகிறோம்.