கடந்த சில நாட்களாக அகில இலங்கை தமிழ் விவாதிகள் மன்றமானது அகில இலங்கை ரீதியிலான விவாதப் போட்டி ஒன்றை “மொழிமுனை” லீக் சுற்றுப் போட்டியாக ஒழுங்கு செய்திருந்தது. இதில் 50 இற்கு மேற்பட்ட பாடசாலை அணிகள் பங்கு பற்றியிருந்தன.
தேசிய ரீதியிலான போட்டியின் முதற்கட்டமாக, மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற சுற்றுப்போட்டியில் தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி அணி, தி/புனித சூசையப்பர் கல்லூரி அணி என்பன வெற்றிபெற்று சுற்றுப்போட்டியின் அடுத்த கட்டத்திற்குத் தெரிவாகியிருந்தது.
அதன்பின்னர் இலங்கை முழுவதிலுமிருந்து தெரிவாகிய 43 அணிகளுடன் போட்டியிட்டு மூன்றாம் சுற்றில் 08 அணிகளில் ஒன்றாக, கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரே விவாத அணியாக தி/ஸ்ரீ சண்முக இந்துமகளிர் கல்லூரி தெரிவாகியிருந்தது.

நேற்று (16/08/2025) கொழும்பு இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற இறுதிச்சுற்றில் பங்குபற்றி இலங்கையின் 4வது விவாத அணியாகவும் முதன்மையான பெண்கள் விவாத அணியாகவும் தெரிவுசெய்யப்பட்டு, வாகை சூடியது.
“மொழிமுனை – 2025” இன் தெரிவுசெய்யப்பட்ட மிகச்சிறந்த 10 விவாதிகளில், அணியின் தலைவர் லக்ஷ்மிதா சிவசங்கரன் (4ம் இடம்) ஸ்ரீஅக்ஷயா ரெஜிஜனகன் (7ம் இடம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
லக்ஷ்மிதா சிவசங்கரன் – தலைவர்
ஸ்ருதிதா சிவசங்கரன்
தரிணி தர்மபவன்
ஸ்ரீஅக்ஷயா ரெஜி ஜனகன்
இங்கு முதலாமிடத்தை கொழும்பு இந்துக்கல்லூரியும், இரண்டாமிடத்தை யாழ் இந்துக்கல்லூரியும் மூன்றாமிடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் மாணவிகளின் அபாரமான விவாதப் பாய்ச்சலில், இந்த மண் மகிழ்வும் பெருமிதமும் அடைகின்றது. எமது சிங்கப்பெண்களுக்கு Trinco Mirror சார்பாக எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்