திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எத்தாபெந்திவெவ பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்ட விரோதமாக லொறியில் ஹல்மில்ல மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றுள்ளது.எத்தாபெந்திவெவ பகுதியில் இருந்து ரொட்டவெவ பகுதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஹல்மில்ல மரக்குற்றிகளை அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஏற்றிக்கொண்டு செல்லும்போது லொறியின் சாரதி உட்பட இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 50 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.