திருக்கோணமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, தி/புனித சூசையப்பர் கல்லூரி மாணவன் M.A.M. Zeeth அவர்கள் எதிர்வரும் 2025 செப்டம்பர் 16 முதல் 26 ஆம் திகதி வரை இந்தியாவின் டில்லியில் நடைபெற உள்ள 17 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்காக விளையாட தெரிவாகியுள்ளார்.
இத்தகைய சிறப்பான சாதனையை எட்டிய Zeeth அவர்களுக்கு, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள் மற்றும் விளையாட்டை நேசிக்கும் அனைவரின் பெரும் பங்கு மற்றும் ஆதரவு குறிப்பிடத்தக்கது. அவரின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருக்கும் இந்த சர்வதேச போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கைக்கும், திருக்கோணமலைக்கும் பெருமை சேர்ப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
M.A.M. Zeeth அவர்கள் தெரிவானமையை பெருமையுடன் பாராட்டி, எதிர்வரும் போட்டியில் வெற்றியீட்ட Trinco Mirror சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்.