அரச வங்கி ஊழியர்களால் இன்றைய தினம் மதியம் 12.40 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை வங்கியின் பிரதான கிளைக்கு முன்னால் இடம்பெற்றது.
இதன்போது அரசாங்கத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்ட, இதுவரை வழங்கப்படாத ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளையும், அதே சமயம் HDFC, RDB வங்கிகள் தொடர்பான மத்திய வங்கியின் நடைமுறைகளை கண்டித்தும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது இலங்கை வங்கி, மக்கள் வங்கி, HDFC, RDB வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி தெரிவித்தனர்.