திருகோணமலை குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயப் பாடசாலை மாணவிகள் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில் மாகாண மட்ட வலைப்பந்தாட்ட போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இந்த வெற்றி, பாடசாலையின் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கும், மாணவிகளின் திறமைகள் மற்றும் கடுமையான உழைப்பிற்கும் அங்கீகாரமாக அமைந்துள்ளது. பாடசாலைக்கும் திருகோணமலை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவிகளுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் Trinco Mirror சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும், இந்த வெற்றி, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சியில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. பள்ளி மாணவிகள் கல்வியோடு இவ்வாறான இணைபாடவிதான செயற்பாடுகளில் சாதிப்பது ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.