Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

ஆவணி 9, 2025
இலங்கை உலகம்
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரைசெய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதி யுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டு கோளை விடுத்துள்ளார்.

அவர் அதில் தெரிவித்துள்ளதாவது,“ஆறாம் திகதி இந்திய நாடாளு மன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன். எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் குறிப்பிடுவேன்.

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்று கருதப்படுகின்றது.

பல தசாப்தங்களாக இலங்கைத் தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. மனித புதைகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக் கான ஒரு குறியீடு.

இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுக வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோர வேண்டும்.

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண் இந்தியா பரப்புரைசெய்யவேண்டும் மோதல்ககாணிப்புடனான விசாரணைக்கு நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும்.

இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது. எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

ஆடி 29, 2025
இலங்கைதிருக்கோணமலை

முத்ததுநகர் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது போலீசாரால் தாக்கப்பட்டவரை வீடு சென்று பார்வையிட்ட இம்ரான் எம்.பி

ஆடி 31, 2025
உலகம்

பழிவாங்கும் சீனா

சித்திரை 12, 2025
இலங்கை

வடமாகாணத்தில் கல்வி நிலைமைக்கு நிர்வாக பிரச்சினையே காரணம் – பிரதமர்

ஆவணி 4, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?