யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கடந்த கால போர் காலத்தில் உருவானதாக சந்தேகிக்கப்படும் மனிதப்புதைகுழி அகழ்விடத்தில், மேலதிக புதைகுழிகள் உள்ளதா என்பதை கண்காணிக்கும் நோக்கில் தரைகீழ் ஊடுருவும் ஸ்கேனிங் (Ground Penetrating Radar – GPR) பணிகள் இன்று (04 ஆகஸ்ட்) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த தொழில்நுட்ப நடவடிக்கைக்கு, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் நேரடி உதவியளித்து வருகின்றது. ஸ்கேனிங் பணிகளைச் செயல்படுத்த தேவையான சிறப்பு உபகரணங்களும் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.