மன்னார் தீவு ஒரு தனித்துவமான பசுமை மரபைக் கொண்ட இயற்கை வளம் நிறைந்த தீவு. ஆனால் தற்போது, இங்கு மேற்கொள்ளப்பட உள்ள இல்மனைட் (Ilmenite) மணல் சுரங்கம் சுற்றுச்சூழலுக்கும், வாழ்வாதாரத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தவிருக்கிறது.
மன்னார் மாவட்டத்தில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இளைஞர்கள் ஒன்றுபட்டு ஆகஸ்ட் மாதம் 06 , 07 ஆம் தேதிகளில் மன்னார் பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்வு தன்னார்வத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் இளம் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் சமூகத்தில் இயங்கும் பல்வேறு இளைஞர் குழுக்கள், அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து நடாத்தும் இந்த நிகழ்வு, அரசியல் கட்சிகள் மற்றும் திட்டங்களை கடந்த ஒரு கூட்டு முயற்சியாகும்.
“எமது தீவின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், எதிர்காலத் தலைமுறைகளுக்காக நிலையான சூழலை உறுதி செய்யவும், இப்போது ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது,” என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரைச் சேர்ந்த அனைத்து பொது மக்களும், இளைஞர்களும் இந்த முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.