ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்ட மட்ட மாநாடு இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் திருக்கோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் ஆரம்பமானது.
மரபு தொட்ட மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான மாநாடு, அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த மூத்த போராளி ராசக்கிளி என அறியப்படும் கி. நாகராஜா அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி அஞ்சலி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த மாநாட்டில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் திரு. இரா. ஜீவன் இராஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு. கு. நாகேஸ்வரன், மாவட்டத் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.
நிகழ்வில் சமூக அரசியல் நிலவரங்கள், மாவட்டத் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் மாநாட்டின் நிறைவில் சிற்றுண்டி பகிர்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.