மூதூர் அந் நுஸ்ரா சமூக அபிவிருத்தி மையத்தின் கீழ் இயங்கி வருகின்ற நெய்தல் நகர் பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று (02) சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாலர் பாடசாலையின் தலைவர் என்.எம்.முஸாஹிர் தலைமையில் இந்த சிறுவர் சந்தை நிகழ்வானது நடைபெற்றது.
இதன்போது மாணவர்கள் பல்வேறு விதமான பொருட்களை சந்தைப்படுத்தினர். இந்த சந்தை நிகழ்வில் பெற்றோர், ஊர்மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறுவர்களிடம் பொருட்களை வாங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
சிறுவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதுடன் அவர்களை ஒரு மகிழ்ச்சியான சூழலுக்குள் கொண்டு செல்லும் நோக்குடன் இந்த சிறுவர் சந்தை நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான உமர் ஜவாத்,பி.எம்.நஸிர் மற்றும் ஆர்.எம்.றிபான் ,ஏ.ஜே. அனஸ் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியையான றினூஸா முஹம்மது இப்த்திகார் ரியாஸ் பாத்திமா றிப்கா அத்துடன் ஆர். சராஜ் (அதிபர்) பல்நோக்கு கூட்றவு சங்கத்தின் தலைவி எப்.நிரோசா மற்றும் நெய்தல் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.