இலங்கை துறைமுக அதிகாரசபையின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிலங்களை இழக்கும் அபாயத்தில் உள்ள முத்துநகர் மக்கள் நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது போலீசாரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 39 வயதான இஞ்சித்தம்பி உவைஸ் என்பவரை பாரளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்கள் நிலாவெளி ஜெயிக்கா குடியிலிருப்பில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று இன்று (31) பார்வையிட்டுள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் பலர் மீது போலீசாரால் தாக்குதல் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.