முத்து நகர் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் தாக்குதல் கண்டிக்கதக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிலங்களை இழக்கும் அபாயத்தில் உள்ள திருகோணமலை – முத்து நகர் பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முத்துநகர் காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மேற்கொண்ட அமைதி போராட்டத்தில் அவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட தாக்குதல் கண்டிக்கதக்கது.
தாம் ஆட்சிக்கு வந்தவுடன் முத்துநகர் காணிப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என கூறிய இந்த அரசாங்கம் தற்போது அந்த விவசாயிகளை எதிர்கொள்ள முடியாமல் பொலிசாரை கொண்டு அவர்களை விரட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.