‘தளம்’ கட்டமைப்பின் ஏற்பாட்டில் எழுநாவின் வெளியீடான கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம் அவர்களின் ‘இலங்கையின் பிரமி மற்றும் சிங்கள கல்வெட்டுகளில் தமிழர்’ எனும் நூல் அறிமுக விழா நேற்றைய தினம் (26.07.2025) தளம் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், தலைமையுரை தளத்தின் இயக்குனர் வைத்தியர் சி. ஹயக்கிரிவன் அவர்களாலும், அறிமுகவுரையானது சுவாமி அகத்திய அடிகளார் அவர்களாலும், மதிப்பீட்டுரையானது வைத்தியர் அ. ஸதீஸ்குமார் அவர்களாலும், ஏற்புரையானது கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம் அவர்களாலும் வழங்கப்பட்டது.
மேலும், வைத்தியர் அ. ஸதீஸ்குமார், கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம் ஆகியோரின் உரைகளில் இலங்கையின் தொல்லியல் ஆய்வுகள், கல்வெட்டுகள் பற்றிய பல முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து, கலந்துரையாடலுடன் நிகழ்வு முடிவுற்றது.
