தம்பலகாமம் நடுப்பிரப்பந்திடல் பகுதியில் கடந்த 25ஆம் திகதி (ஜூலை 25, 2025) இரவு 12.00 மணியளவில் ஒரு வீடு தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவரும் அந்நேரத்தில் கொழும்பில் இருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டது. குடும்பத்தினர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவரை அழைத்து வருவதற்காக கொழும்பு பயணித்திருந்தனர்.
தீ விபத்தின் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் வீட்டில் இருந்த பலவிதமான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.