ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதுவர் ஜேம்சன் கிரியர் இடையே இன்று மதியம் ஒன்லைன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாக இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளைக் குறைப்பதும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது .
இதில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அதிகாரிகளும் இந்த ஒன்லைன் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.