அமெரிக்காவின் அண்மைய வரி விதிப்புக்கு பழிவாங்கும் வகையில் சீனாவும் வரியை அதிகரித்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா விதித்த வரி இன்று 125 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 84 வீதமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் சீனாவிற்கு எதிரான 145 வீத வரி விதிப்பு குறித்து அமெரிக்கா அறிவித்தலொன்றை விடுத்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா அமெரிக்க பொருட்களுக்கான புதிய வரி விதிப்பை இன்று அறிவித்தது.