18 ஆவது ஐ.பி.எல். போட்டியின் 23 ஆவது போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் நேற்றைய தினம் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் அணிக்கு 218 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.